புதுடெல்லி, 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. ரூ.529.38 கோடி செலவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி தாக்கல் செய்துள்ள செலவின அறிக்கைகளில் தெரியவந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை மேற்கு வங்காளத்தில் மட்டும் செலவிடப்பட்டுள்ளது. அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் செலவின அறிக்கைகளின்படி, பா.ஜ.க.வின் மத்திய தலைமை அலுவலகம் மொத்தம் ரூ.529.38 கோடி செலவிட்டுள்ளது. இதில் மேற்கு வங்காளத்தில் மட்டும் ரூ.286 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த செலவில் சுமார் 54 சதவீதமாகும்.
மேற்கு வங்காளத்தில் பொதுவான கட்சிப் பிரசாரத்துக்காக ரூ.217.16 கோடியும், வேட்பாளர்களுக்கான செலவாக ரூ.69.83 கோடியும் பா.ஜ.க. செலவிட்டுள்ளது. இதில் வேட்பாளர்களுக்கு மட்டும் ரூ.58.80 கோடி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அசாமில் ரூ.96.26 கோடியும், கேரளாவில் ரூ.82.67 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.51.56 கோடியும், புதுச்சேரியில் ரூ.11.89 கோடியும் பா.ஜ.க. செலவிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் காலத்தில் பா.ஜ.க.வுக்கு ரூ.1,494 கோடி வருவாய் கிடைத்துள்ளது.









