புரட்டாசி வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு எப்படி பெருமாளின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாளோ, அதே போல் புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். புரட்டாசி வெள்ளிக்கிழமையில், மகாலட்சுமியை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

புரட்டாசி மாதத்தின் அனைத்து நாட்களும் தினமும் பெருமாள் கோவிலுக்கு செல்வதும், பெருமாளை வழிபடுவதும் எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்கும். அதேபோல், புரட்டாசி மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நினைத்து சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும், லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது.

நீண்டகால கடன் தொல்லையில் இருந்து விடுபட மகாலட்சுமி வழிபாடு சிறந்தது.ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் லட்சுமி தேவியை வணங்குவதோடு சில விஷயங்களை பின்பற்றினால் துன்பங்கள் விலகி அவரின் அருள் கிடைப்பதோடு, சகல விதமான செல்வ நலன்கள் மற்றும் குறையாத அருளை பெற முடியும். புரட்டாசி வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி மற்றும் பெருமாளை வழிபடுவது செல்வத்தையும் அமைதியையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படி மகாலட்சுமியின் அருளை பெற புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் என்ன செய்ய வேண்டும்.

1. வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவிக்கு கற்பூரத்தை காட்டி வணங்கி, முழு வீட்டிற்கும் காட்டுங்கள். இதை செய்வதன் மூலம், நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வருவது மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும்.

2. வெள்ளிக்கிழமைகளில் தேன் கலந்த பாயாசம் படைத்து வணங்கி, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் பணத் தட்டுப்பாடு தீரும்.

3. வெள்ளிக்கிழமை மாலை லட்சுமி ஸ்தோத்திரத்தை ஓதுவது சிறந்தது . மந்திரத்தை படிக்கும் போது வீட்டின் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும். விஷ்ணு புராணத்தின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை லட்சுமி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது மிகச்சிறந்த பலனை தரவல்லது.

4. வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். எறும்புகளுக்கு இனிப்பு பொருட்களை கொடுக்கலாம்.

5. புரட்டாசி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நினைத்து சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவதும், லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது.

6. புரட்டாசி மாதத்தில் துளசியை வணங்குவதும் துளசிச் செடிக்கு தண்ணீர் விடுவதும் விசேஷம். இதுவரை இல்லாவிட்டாலும் வீட்டில் துளசிச் செடி வைத்து, புரட்டாசி மாதத்தில் வளர்க்கத் தொடங்குங்கள். இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் அனைத்து சுபிட்சங்களையும் நிறைத்து பெருமாளும், மகாலட்சுமியியும் அருள் செய்வார்கள். இந்த மாதத்தில் ‘கோவிந்தா’ என்று பெருமாளின் திருநாமம் சொல்லி, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அவை யாவும் வெற்றியில் முடியும்.

7. துளசி செடியைச் சுற்றி, வலம் வந்து வழிபாடு செய்யும் போது, ஹரே ராம ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் சொல்வது மிகவும் சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here