கெரிக்-ஜெலி அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட வீதி விபத்தில் தாயின் உடலின் கீழ் சிக்கிய குழந்தை உட்பட 4 பேர் பலி!

கோலாலம்பூர்:

பேராக் மாநிலத்தில் கெரிக்-ஜெலி கிழக்கு-மேற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தாசிக் பந்திங் அருகே இடம்பெற்ற 3 வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில், Perodua Axia காரில் பயணித்த சிறுமி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து காயமடைந்தவர்களை மீட்க உதவிய லோரி ஓட்டுநர் கைருல் அனுவார் (42) இச்சம்பவம் குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்கையில்: “ஆரம்பத்தில் காரில் 4 பேர் மட்டுமே இருப்பதாக நினைத்தோம். ஒரு பெண்ணின் சடலத்தை மீட்க முயன்றபோது, அவரது உடலின் கீழே சுமார் 3 வயதுடைய பெண் குழந்தை ஒன்று சிக்கியிருப்பதை உணர்ந்தோம். அக்குழந்தையை வெளியே எடுத்தபோது அது உயிருடன் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அக்குழந்தையின் உயிர் பிரிந்துவிட்டது” எனத் தெரிவித்தார்.

கோழிமுட்டை ஏற்றி வந்த தனது லோரிக்கு முன்பாக வந்த Perodua Axia கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து லோரியின் மீது பலமாக மோதியதாகக் குறிப்பிட்ட அவர், 12 ஆண்டு கால ஓட்டுநர் அனுபவத்தில் இவ்வளவு கொடூரமான விபத்தை நேரில் பார்த்ததில்லை எனக் கண்ணீருடன் கூறினார்.

இன்று மதியம் 1.00 மணியளவில் Perodua Axia கார், Proton Persona கார் மற்றும் லோரி ஆகிய 3 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளதுடன், போலீசார் இது தொடர்பான விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here