தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியது பற்றி விசாரிக்க உறுதி..!!

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து இஸ்ரேல் நிறுவனம் விளக்கம்!

ஜெருசலேம்:

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விளக்கம் அளித்திருக்கும் இஸ்ரேல் நிறுவனம் தங்களது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரிப்பதாக உறுதி அளித்திருக்கிறது.

இந்தியாவில் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதுமாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தில் வெளியாகியிருக்கும் பட்டியல் தவறானது என்று என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பெகாசஸ் விவகாரத்தில் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான பட்டியல் சரியானது அல்ல என்று கூறியுள்ளது. அந்த செல்போன் எண்கள் என்.எஸ்.ஓ. குழுமத்துடன் தொடர்புடையவை அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் தங்கள் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரிப்பதாகவும் தேவையான இடங்களில் அமைப்பை மூடிவிடுவோம் எனவும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here