தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி டெல்லியில் இளைஞர்கள் மீண்டும் போராட்டம்

புதுடெல்லி, தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி டெல்லியில் இளைஞர்கள் மீண்டும் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்ஐஆர் உட்பட தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துக்கு அவர் செவி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி, கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​ (சிஜேபி), கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பல்வேறு மாணவர், இளைஞர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில், எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இளைஞர்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்தினர்.தடையை மீறி போராடியவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக நீடித்தன. காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இன்றும் தொடர்ந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here