ஆஸ்திரேலிய அணி, 99 ரன்னில் சுருண்டது

கெபேஹா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 99 ரன்னில் சுருண்டது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் கெபேஹாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 425/9 ரன் (‘டிக்ளேர்’) எடுத்தது. மூன்றாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3/1 ரன் எடுத்திருந்தது.

யான்சென் ‘ஐந்து’

நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. போலண்ட் (2), ஹெட் (14) என இருவரும் யான்சென் ‘வேகத்தில்’ வீழ்ந்தார். லபுசேன் (14) ஏமாற்றினார். தொடர்ந்து வேகத்தில் மிரட்டிய யான்சென், ரென்ஷா (12), அலெக்ஸ் கேரி (0), வெப்ஸ்டர் (13) என மூவரையும் அடுத்தடுத்து வெளியேற்றினார். கேப்டன் கம்மின்ஸ் (7), ஸ்டார்க்கும் (1) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 99 ரன்னில் சுருண்டது. யான்சென் 5 விக்கெட் சாய்த்தார்.

பாலோ ஆன்

இதையடுத்து, 326 ரன் முன்னிலை பெற்ற தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலிய அணிக்கு ‘பாலோ ஆன்’ கொடுத்தது. இதையடுத்து தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவக்கியது ஆஸ்திரேலிய அணி.

இம்முறையும் மேடின்சன் (8) ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினார். ஹார்மர் சுழலில் லபுசேன் (39) சிக்கினார். மறுபக்கம் சுதாரித்துக் கொண்ட ஹெட், அரைசதம் கடந்தார். ரபாடா ‘வேகத்தில்’, ரென்ஷா (11) விரைவில் திரும்பினார்.

ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 150/3 ரன் எடுத்து, 176 ரன் பின்தங்கி இருந்தது. ஹெட் (83), வெப்ஸ்டர் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here