ஜேசன் சஞ்சயின் “சிக்மா” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தமன் இசையில் ஆக்‌ஷன் படமாக உருவான ‘சிக்மா’ படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில், பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா ஒரு துள்ளலான பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார்.

பொருளாதார சிக்கலில் இருக்கும் நாயகன், தன் சமயோசித புத்திசாலித்தனத்தால், சூதாட்ட கும்பலின் ரகசியப் பணத்தைக் கொள்ளையடித்து வில்லனை வீழ்த்துவதே படத்தின் கதை.

‘சிக்மா’ திரைப்படம் உலகளவில் ரூ. 13 கோடி வரை வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்த நிலையில், ‘சிக்மா’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here