துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வெளியான ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நட்சத்திரப் பட்டாளம்
‘ஐ ஆம் கேம்’ திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் மிஷ்கினும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

ரூ.50 கோடி வசூல்
சூதாட்டத்தை மையமாகக் கொண்ட திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம், மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியானது. அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் சுமார் ரூ.50 கோடி வசூல் ஈட்டியுள்ளது.

நவம்பர் 6-ல் ஓடிடி வெளியீடு
இந்த நிலையில், ‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here