குரூண் வெள்ள நிலவரம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 619-ஆகக் குறைந்தது

குரூண், ஜூன் 3 :

இன்று காலை 8.30 மணியளவில் சூராவ் கம்போங் சுங்கை பாங்காக்கில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையம் முற்றிலுமாக மூடப்பட்டதை அடுத்து, குரூணில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 910 பேரில் இருந்து 619 ஆகக் குறைந்துள்ளது.

இங்கு ஏற்கனவே 70 குடும்பங்களைச் சேர்ந்த 291 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர், இன்று தண்ணீர் முழுவதுமாக வடிந்த பிறகு அவர்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று
கோல மூடா மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, கேப்டன் (PA) அசார் அஹ்மட் கூறினார்.

மேலும் 149 குடும்பங்களைச் சேர்ந்த 619 பேர் பாதிக்கப்பட்டுள்ள பெக்கன் குருன் மசூதியில், இன்னமும் இயங்கிவரும் ஒரு வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here