( ரெ.மாலினி |மலாக்கா)
மலாக்கா மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பக்காத்தான் ஹராப்பான் (PH) மலாக்கா தனது தேர்தல் அறிக்கையான ‘ஆஸ்பிராசி மெலாக்கா ருமா கிட்டா’ (Aspirasi Melaka Rumah Kita) திட்டத்தை வெளியிட்டுள்ளது. தூய்மையான, வெளிப்படையான மற்றும் திறமையான நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கையில், 3 முக்கிய அம்சங்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான 12 முன்னுரிமைத் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி சஹாரி கூறுகையில், இந்தத் தேர்தல் அறிக்கை 3 முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். முதலாவது, நிர்வாகத் திறன், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ‘ஸ்மார்ட் மலாக்கா மாற்றம்’ திட்டமாகும். இரண்டாவது, இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.
மூன்றாவது அம்சமாக, மலாக்காவின் சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்தி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது இடம்பெற்றுள்ளது. இந்த 3 முக்கிய அம்சங்களின் வழியாக மக்களின் நலன், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதே பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் அறிக்கையின் நோக்கம் என்றும் அட்லி சஹாரி தெரிவித்தார்.























