மலாக்கா மாநிலத்தில் உள்ள 21 தமிழ்ப்பள்ளிகளின் கற்பித்தல், கற்றல் வசதிகளை மேம்படுத்துவதற்காக, மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா 7 லட்சத்து 55 ஆயிரத்து 390 ரிங்கிட் நிதி ஒதுக்கியுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன், இன்று ஆயர் மெர்பாவ் பகுதியில் உள்ள ஜாசின் லாலாங் தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்தபோது தெரிவித்தார்.

இந்த நிதி, மடானி தளவாட உதவி, கூடுதல் வகுப்புகள், திறன்பலகை உள்ளிட்ட மின்னிலக்கக் கற்றல் கருவிகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும்.கல்வி அமைச்சு, பள்ளி நிர்வாகம், பள்ளி ஆளுநர் குழு ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், பாலர் பள்ளி முதல் உயர்கல்வி வரை இந்திய மாணவர்களுக்குப் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை ரமணன் குறிப்பிட்டதாக பெர்னாமா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.













