இஸ்ரேல் தேர்தலில் திருப்புமுனை; எதிர்க்கட்சிக்கு அதிகரிக்கும் ஆதரவு – பிரதமர் பதவியை இழக்கிறாரா நெதன்யாகு?…

ஜெருசலேம்,ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் எனவும், அரசாட்சியில் பங்கெடுக்க மாட்டோம் ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்
‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் கடந்த அக்டோபர் 27-ந்தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். குறிப்பாக இஸ்ரேலில் உள்ள அரபு குடிமக்கள் அதிக அளவில் வாக்கு செலுத்தினர்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நெதன்யாகு அணிக்கு 53 இடங்களும், ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி அணிக்கு 48 இடங்களும் கிடைத்தன. தேர்தலில் போட்டியிட்ட அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை.

ஜனாதிபதி
இதனிடையே இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளை அந்நாட்டின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஏற்றுக்கொண்டார். மேலும், புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனைகளை தொடங்கினார்.

திருப்புமுனை
இந்நிலையில், இஸ்ரேல் தேர்தலில் பெரும் திருப்புமுனையாக நெதன்யாகு தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய தோரா ஜுடாயிசம்(யூ.டி.ஜே.) கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, 53 இடங்களைப் பெற்றிருந்த நெதன்யாகு கூட்டணியின் பலம் தற்போது 46 ஆக குறைந்துள்ளது.

மறுபுறம் காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கு, அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட்(11 இடங்கள்) மற்றும் ரா’அம்(8 இடங்கள்) ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் 48 இடங்களைப் பெற்றிருந்த காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணியின் பலம் தற்போது 67 ஆக அதிகரித்துள்ளது.

வெளியில் இருந்து ஆதரவு
ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் பெரும்பான்மை தேவை என்ற நிலையில், ஐசென்கோட் தலைமையிலான கூட்டணி தற்போது 67 இடங்களுடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. இதில் அரபு கட்சியான ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி, ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் எனவும், அரசாட்சியில் பங்கெடுக்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளது.

ஆலோசனைகள் நிறைவு
நெதன்யாகு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது வாக்கு எண்ணிக்கை

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அக்டோபர் 28-ந்தேதி நடைபெற்றது. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது  என்ற மக்களின் விருப்பத்தை ஏற்று ஐசென்கோட் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் முடிவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெஞ்சமின் நெதன்யாகு தனது பிரதமர் பதவியை இழப்பாரா? அல்லது இஸ்ரேல் அரசியலில் வேறு ஏதேனும் திருப்பங்கள் ஏற்படுமா? என சர்வதேச அரசுகள் உற்றுநோக்கி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here