பாகிஸ்தானில் பிரம்படியால் இறந்த 10 வயதுச் சிறுவன்

பாகிஸ்தானின் Peshawar வட்டாரத்தில் 10 வயதுச் சிறுவன் ஒருவனை பள்ளி தலைமை ஆசிரியர் பிரம்பால் தலை, முகம், கழுத்து, முதுகு ஆகிய இடங்களில் அடித்ததால் காயங்களுக்குள்ளாகி மாண்டார்.

சம்பவம் நிகழ்ந்தவுடன் சிறுவன் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் காயங்கள் பலமாக இருந்ததால் சிறுவன் பிழைக்கவில்லை. Peshawar காவல்துறையினர், தலைமை ஆசிரியரைக் கைது செய்துள்ளது.

பாகிஸ்தானில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை பெரிய பிரச்சினையாக இருக்கிறது. 2020ஆம் ஆண்டு 8 வயதுச் சிறுமி பணிப்பெண்ணாக வேலைபார்த்த இடத்தில் முதலாளியால் அடிக்கப்பட்டதால் பின் இறந்தார். 2021ஆம் ஆண்டு 8 வயதுச் சிறுவன் பாடத்தை மனப்பாடம் செய்யாததால் அவருடைய ஆசிரியரால் அடிக்கப்பட்டு, காயங்களால் இறந்துபோனார்.

அந்தச் சம்பவங்களுக்குப் பின் சிறுவர்களை வன்முறையிலிருந்து பாதுகாக்க பாகிஸ்தான் அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகம் செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here