டோஹா,
வளர்ச்சி கண்டு வரும் நாடான மலேசியா, தகவல் கட்டமைப்பு உருமாற்றத்திற்கான தேசிய திட்டத்தைக் கொண்டிருக்கிறது என தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாமி ஃபட்ஸில் கூறினார்.
சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த உருமாற்றத் திட்டம் அமைகிறது என்றார் அவர்.
குவாந்தம் கம்ப்யூட்டிங் மூலம் அச்சுறுத்தல்கள் வருவதால் சைபர் பாதுகாப்புக்கு நாடு முக்கியத்துவம் அளிக்கிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
பகிரப்பட்ட ஆய்வு, மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கும்படி எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்திற்கு உத்தரவிட்டிருக்கிறேன்.
தேசிய பாதுகாப்பு மன்றம், தேசிய பாதுகாப்பு ஏஜென்சி ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும்படி எம்சிஎம்சியை நான் பணித்திருக்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சைபர் பாதுகாப்பை முறையான நடைமுறைகளின் கீழ் உறுதிப்படுத்துவதற்கு அல்லது வலுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரும் இதில் இணைந்துகொள்ளலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்புத்துறை வளர்ச்சியும் அரசாங்கத் தரப்பும் இத்துறையில் ஈடுபட்டிருக்கும் தரப்பினரும் நம்பிக்கைக்குரிய ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும்.
மலேசியா ஒரு தேசியத் திட்டத்தைக் கொண்டுவரும் வகையில் மிக முக்கியமான தகவல் கட்டமைப்பு நோக்கி நகர்கிறது என்றும் அவர் விவரித்தார்.
டோஹாவில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற 2026 அனைத்துலக தொலைத்தொடர்பு யூனியன் மாநாட்டில் வெளியிட்ட மலேசியக் கொள்கை மீதான அறிக்கையில் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.






















