KK மார்ட் காலுறை சர்ச்சை: இன, மத புரிந்துணர்விற்கான ஒரு வாய்ப்பு – ஜோகூர் அம்னோ இளைஞரணி தலைவர்

ஜோகூர் பாரு:

KK சூப்பர் மார்ட் பல்பொருள் அங்காடியில் விற்கப்பட்டதாகக் கூறப்படும் காலுறைகள் பற்றிய சர்ச்சையை நாட்டிலுள்ள பல்லின, மத, கலாசாரங்களை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு என்று, ஜோகூர் அம்னோ இளைஞரணி தலைவர் நூர் அஸ்லீன் ஆம்ப்ரோஸ் தெரிவித்தார்.

“KK மார்ட் விவகாரத்தில், நாம் நன்றாக சிந்திக்க முயற்சித்தால், அது உண்மையில் பெரும் தவறு என்பதை ஏற்றுக்கொள்ள முடிந்தால், நாம் அந்தச் சம்பவத்தை புரிந்துகொள்ள வழிவகுக்கும்,” என்றும், இது போன்ற ஒரு சம்பவம் உண்மையில் நம் அனைவருக்கும் ஒருவரையொருவர் பற்றிய புரிதலை அதிகரிக்க ஒரு வாய்ப்பளிக்கிறது ” என்று நூர் அஸ்லீன் கூறினார்.

அல்லாஹ்வைப் பற்றிய புரிதலை முஸ்லிம்கள் மற்றவர்களுக்கு பரப்புவதற்கு இது ஒரு “சிறந்த வாய்ப்பு” என்று சொன்ன அவர், அதாவது “அப்பெயர் நமக்கு எவ்வளவு உயர்ந்தது என்பதை மற்ற இன, மதத்தவருக்கு இலகுவாக புரிந்து கொள்ளவும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

“முஸ்லிமல்லாதவர்களும் தொடர்ந்து இஸ்லாத்தை மதிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பும்போது
“நமது நடத்தைகள், நமது ஒழுக்க விழுமியங்கள் மற்றும் நாம் பேசும் போது நமது வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது அனைத்தும் இறுதியில் இஸ்லாத்தை பிரதிபலிக்கும், இது அமைதியான மற்றும் மதிப்புமிக்க நாடு, முஸ்லிமல்லாதவர்கள் மற்றும் மலேசியாவின் பல இன சமூகத்தின் மரியாதையையும் நாம் பேண வேண்டும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here