பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்தது.
நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உக்ரெய்னின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஆண்ட்ரீவா 7-5, 6-3 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
முன்னணி வீராங்கனையான உக்ரெய்னின் ஸ்விடோலினா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.















