கோலாலம்பூர்,
மலேசியாவின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 12.45 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பின்படி, தீபகற்ப மலேசியாவின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் பிற்பகல் 3 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் உலு லங்காட், செப்பாங், கோம்பாக், உலு சிலாங்கூர், பெட்டாலிங் மற்றும் கோலா லங்காட் ஆகிய ஆறு மாவட்டங்களும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், ஜோகூர் மாநிலத்தில் ஜோகூர் பாரு, கூலாய், செகாமாட், குளுவாங் மற்றும் பத்து பஹாட் ஆகிய பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதனிடையே, லாபுவான் கூட்டரசுப் பிரதேசம் மற்றும் சபா மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பிற்பகல் 4 மணி வரை வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபாவில் சிப்பித்தாங், பியூஃபோர்ட், கோலா பென்யு, கோத்தா பெலுட், ரானாவ், லஹாட் டத்து, சண்டகான் மற்றும் கூடாட் ஆகிய பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சூழல் உருவாகும்போது அல்லது அந்த நிலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கக்கூடும் எனக் கணிக்கப்படும்போது, இதுபோன்ற இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் வெளியிடப்படுவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கியுள்ளது.
இந்த எச்சரிக்கைகள் குறுகிய காலத்திற்கானவை என்றும், வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும்






















