ஜென்சன் நியமனம்: நானே ஒப்புக்கொள்ள வைத்தேன்- டிரம்ப்…

வாஷிங்டன், அமெரிக்காவை சோ்ந்த உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான தனிப்பட்ட உறவு தேச பாதுகாப்புக்கு எதிரானதாக அமையும் என குற்றச்சாட்டு எழுந்ததால், தனது பதவியை கடந்த 13 ஆம் ஆண்டு ஜென்சன் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீன உளவாளி உடனான தொடர்பு, நாட்டின் பாதுகாப்புத் தன்மையை பாதிக்கும் என வெளிப்படையாக பலரால் விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய மதிப்பில் பல லட்சம் கோடி வரையிலான சந்தை மதிப்பை என்விடியா நிறுவனம் இழந்து வந்தது.

இதனால் முதலீட்டாளர்களும் பங்குதாரர்களும் மீண்டும் ஜென்சனை தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒருமனதாக வாக்களித்து மீண்டும் ஜென்சன் ஹுவாங்கை சிஇஓவாக நியமிக்க ஒப்புதல் வழங்கியது.

இந்தநிலையில், என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்படுவதற்கு அந்நிறுவன இயக்குநர் குழுவிடம் தாமே பேசி சம்மதிக்க வைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜென்சன் எந்தத் தவறும் செய்யவில்லை. தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்த பிறகே இயக்குநர் குழு ஏற்றுக்கொண்டனர் என டிரம்ப் கூறியுள்ளார்.

மீண்டும் உயரும் பங்குச்சந்தை
ஜென்சன் ஹுவாங் மீண்டும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து என்விடியாவின் நிறுவனப் பங்குகள் நியூயார்க் பங்குச்சந்தையில் ஒரே நாளில் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதிலிருந்து 33 சதவீதம் வரை சரிந்த பங்குச்சந்தை, தற்போது அவர் மீண்டும் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here