சிரம்பான்:
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மனைவியை இஸ்திரிப் பலகையால் (Ironing board) தாக்கி காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 26 வயது லோரி ஓட்டுநர் ஒருவர், இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்ற அறையில் கதறி அழுதார்.
நீதிபதி அஹ்மத் ஃபுவாட் ஓத்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்ட முகமட் ஹைகால் சாலே தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
கடந்த நவம்பர் 22-ஆம் தேதி மாலை சுமார் 6.40 மணியளவில், சிரம்பான் பிரிமா சென்ட்ரல் பகுதியில் உள்ள அறை ஒன்றில், 26 வயதான தனது மனைவியின் முதுகில் இஸ்திரிப் பலகையால் வேண்டுமென்றே தாக்கிக் காயம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு குற்றவியல் சட்டம் பிரிவு 324 மற்றும் பிரிவு 326A ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான துணை அரசு வழக்கறிஞர் நோரசிஹா அஸ்முனி கூடுதல் நிபந்தனைகளுடன் ஒரு நபரின் உத்தரவாதத்தின் பேரில் 15,000 ரிங்கிட் பிணை வழங்கப் பரிந்துரைத்தார்.























