எவரெஸ்ட் மலையில் ஆடவரது சடலம் கண்டெடுப்பு; 100 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போனவருடையதாக இருக்கலாம்

காத்மாண்டு:

நேப்பாளத்தில் உள்ள எவரெஸ்ட் மலையில் ஆடவர் ஒருவருடைய சடலத்தை விளக்கப்படக் குழு ஒன்று கண்டெடுத்துள்ளது.

அந்தச் சடலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு எவரெஸ்ட் மலையில் காணாமல்போன ஒரு மலையேறியுடையதாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுவ

நம்பப்படுவதாக நேஷனல் ஜியாகிராஃபிக் சஞ்சிகை நேற்று (அக்.11) செய்தி வெளியிட்டது.

தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக இமய மலைப் பகுதிகளில் பனி உருகி வருகிறது.இதனால், எவரெஸ்ட் மலையில் உயிரிழந்து, சடலம் கிடைக்காத மலையேறிகளின் சடலங்கள் தற்போது கண்களுக்குத் தட்டுப்படுவதாகக் கூறப்படுகிறது.

விளக்கப்படக் குழுவினர் கண்டெடுத்த உடல் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரு இர்வின் என்பவருடையதாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அதற்கு சான்றாக அவரது காலுறையில் ஏ.சி. இர்வின் எனும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இவர், ஜார்ஜ் மெலோரி என்பவருடன் 1924ஆம் ஆண்டில் எவரெஸ்ட் மலையில் ஏறினார். அப்போது இருவரும் காணாமல் போயினர், பின்னர் மெலோரியின் உடல் 1999ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது.இர்வின் காணாமல் போனபோது அவருக்கு 22 வயது. தற்போது அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த அவரது குடும்பத்தினர் மரபணுச் சோதனை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here