கிள்ளான், தாமான் எங் ஆன் என்ற இடத்தில் ஆயுதமேந்திய தாக்குதல் குழுவினரின் தாக்குதலுக்குப் பிறகு ஒருவர் இறந்து கிடந்தார். திங்கள்கிழமை (ஜூன் 13) காலை 9.47 மணியளவில் சாலையின் நடுவில் ரத்த வெள்ளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவரின் தலை, உடல் மற்றும் கைகளில் பல வெட்டுக் காயங்கள் இருந்ததாக வடக்கு கிள்ளான் OCPD உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் கூறினார். அவர் ஆயுதம் ஏந்திய குழுவினரால் தாக்கப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம். நாங்கள் இன்னும் கொலைக்கான நோக்கத்தை விசாரித்து வருகிறோம் என்று அவரை தொடர்பு கொண்டபோது கூறினார்.
ஏசிபி விஜய ராவ், வழக்கு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகம் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் கொலைக்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.









