அடுத்த 7 நாட்களின் எரிப்பொருளின் விலை மாற்றம்

டீசல், RON95 மற்றும் RON97 பெட்ரோல் ஆகியவற்றின் சில்லறை விலைகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 வரையிலான வாரத்திற்கு மாறாமல் இருக்கும். இன்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில், RON95, RON97 மற்றும் டீசல் ஆகியவை முறையே லிட்டருக்கு RM2.05, RM4.30 மற்றும் RM2.15 ஆக இருக்கும். இரண்டு பொருட்களின் விலையும் தற்போதைய உச்சவரம்பு விலையை விட அதிகரித்துள்ளது.

ஆட்டோமேட்டிக் ப்ரைசிங் மெக்கானிசம் (APM) விலையை பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக அது கூறியது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அது கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here