வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜோகூர் மாநிலத்திற்கு RM50 மில்லியன் உடனடி வெள்ள உதவியை கூட்டரசு அரசங்கம் அறிவித்துள்ளது.
இந்த உடனடி நிதி ஒதுக்கீடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதோடு, மாநிலத்தின் பிற அவசரத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் என்று, இன்று யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா மஸ்ஜிட்டில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் பார்வையிட தான் ஜோகூர் செல்ல உள்ளதாகவும் அன்வார் கூறினார்.














