சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்கள், தொழில்துறையை மீட்டெடுக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான விவேகம் மற்றும் திறந்த மனப்பான்மையை பராமரிக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்தெரிவித்தார்.
சுற்றுலா வழிகாட்டிகள், உணவு வழங்குநர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்தவர்களும் சுற்றுலா தொடர்பான சவால்களை சமாளிக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் மற்றும் புதிய முன்னேற்றங்களை உருவாக்க, அதி தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் மூளைச்சலவை செய்யும் அமர்வுகள் மூலம் பகுத்தறிவு மற்றும் திறந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சருமான அவர் கூறினார்.









