எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஒன்பது உணவகங்கள் மூடப்பட்டன

சேப்பாங்காரில் உள்ள பாலிடெக்னிக் வணிக மையத்தில் உள்ள ஒன்பது உணவகங்களின் வளாகத்தில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் கண்டறிந்ததையடுத்து, அவற்றை உடனடியாக மூடுமாறு சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கோத்தா கினாபாலு சுகாதார அலுவலகத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக உணவுச் சட்டம் 1983 மற்றும் உணவு சுகாதார விதிகள் 2009 இன் பிரிவு 32B இன் கீழ் அவற்றை மூட உத்தரவிடப்பட்டது.

மேலும் பல்வேறு குற்றங்களுக்காக விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் அல்லது பிரதிநிதிகளுக்கு மொத்தம் 11 அறிவிப்புக்கள் வழங்கப்பட்டதாக கோத்தா கினாபாலு சுகாதார அதிகாரி டாக்டர் பிரபாகரன் தனரா தெரிவித்தார்.

“நாங்கள் 15 வளாகங்களை ஆய்வு செய்தோம், அவற்றில் ஒன்பது இடங்களை சுகாதாரம் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக உடனடியாக மூட உத்தரவிட்டோம். மேலும் “உணவுச் சட்டம் 1983 இன் பிரிவு 32B இன் கீழ் உணவு வளாகங்களை சுகாதார அமைச்சகத்தில் பதிவு செய்யத் தவறியதற்காக அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறினார்.

இந்த நடவடிக்கையில் கோத்தா கினாபாலு நகராண்மைக் கழகம், உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த பணியாளர்களும் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here