கிறிஸ்தவ வெளியீடுகளில் “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதை ஆதரித்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டை வாபஸ் பெறுவதற்கான அரசாங்கத்தின் முடிவு தொடர்பில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று செவ்வாய்கிழமை (மே 23) நாடாளுமன்றத்தில் விளக்குவார்.
இன்றைய கட்டளை நிரலின் அடிப்படையில், காலை 10 மணிக்கு அமைச்சரின் கேள்வி நேரத்தில் (MQT) டத்தோ இட்ரிஸ் அகமட் (பிஎன்-பாகன் செராய்) இந்த விஷயத்தை எழுப்புவார்.
இந்த வழக்கில் கிறிஸ்தவர்கள் கற்றல் நோக்கத்திற்கான “அல்லாஹ் ” என்ற வார்த்தையையும் மற்ற மூன்று அரபு வார்த்தைகளையும் தங்கள் மத வெளியீட்டில் பயன்படுத்தலாம் என தீர்ப்பளித்தது. அதனைத்தொடர்ந்து அரசாங்கம் அத்தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மேன்முறையீடு செய்திருந்த நிலையில், கடந்த மே 15 அன்று, உள்துறை அமைச்சகமும் மலேசிய அரசாங்கமும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை வாபஸ் பெற்றதாகக் கூறப்படுகிறது.









