ஆயுதமேந்தி தாயாரை கொலை செய்து விடுவேன் என மிரட்டிய ஆடவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்

ஈப்போ: போதையில் இருந்ததாகக் கூறப்படும் ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர், தனது தாயை வெட்டிவிடுவேன் என்று மிரட்டி ஆக்ரோஷமாகச் செயல்பட்டபோது போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் பாகன் டத்தோவின் ஊத்தாங் மெலிந்தாங்கில் நடந்த இந்த சம்பவத்தின் போது 44 வயதான தொழிலாளி சரணடைய மறுத்ததாக பேராக் காவல்துறைத் தலைவர் யுஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்.

சந்தேக நபர் தனது 72 வயது தாயை வெட்டுவதாக மிரட்டினார். மேலும், போலீசாரை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறும் கூச்சலிட்டார். போலீசார் சந்தேக நபரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் தனது தாயை கத்தரிக்கோலைக் காட்டி மிரட்டியதாக என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

போலீஸ்காரர்கள் வீட்டிற்குள் நுழைந்ததை உணர்ந்த சந்தேக நபர் தனது தாயை தரையில் தள்ளிவிட்டதாகவும், இதனால் வயதான பெண் மயக்கமடைந்ததாகவும் யுஸ்ரி கூறினார். மேலும் தன்னை கைது செய்ய முயன்ற போலீசார் மீது மின்விசிறி மற்றும் பராங்கை வீசினார்.

அப்பெண்மணியின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த, சந்தேக நபரின் இடது தோள்பட்டையில் போலீசார் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தினர். சந்தேக நபர் சுருண்டு விழுந்தார். பாதிக்கப்பட்டவர் காப்பாற்றப்பட்டார் என்றார்.

ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது, ஆனால் சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த நபருக்கு  போதைப்பொருள் குற்றங்களுக்காக இரண்டு பதிவுகள் இருப்பதாகவும் யுஸ்ரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here