ஈப்போ: டொயோட்டா கேம்ரியை ஓட்டிச் சென்ற ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக அவரது கார் நேற்று தஞ்சோங் மாலிம் அருகே ஜாலான் கம்போங் லம்பாக்கில் உள்ள ஒரு இந்து கோவிலின் சுவர் மீது மோதியது.
முஅல்லிம் மாவட்ட காவல்துறை தலைவர் ஹஸ்னி நசீர் கூறுகையில், பொதுமக்கள் காலை 8.40 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஈப்போ தாமான் கம்பாரை சேர்ந்த லோக் மிங் சோய் (55) என்பவர் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு மாரடைப்பால் இறந்தது உறுதி செய்யப்பட்டது என்றார்.
முதற்கட்ட விசாரணையில், கம்போங் லம்பாக்கில் இருந்து தஞ்சோங் மாலிம் டவுன் நோக்கி பயணித்த பாதிக்கப்பட்ட நபர், தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, கோயில் சுவரில் மோதியதற்கு முன், சாலையின் வலதுபுறத்தில் சறுக்கி விழுந்தது தெரியவந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41 (1)இன் கீழ் விசாரிக்கப்பட்டது.








