செ.குணாளன்
பிறை, ஆக, 6 –
ஏழு திட்டத் தேர்தல் கொள்கை அறிக்கையின் வழி பிறை மக்களைச் சந்தித்து வருகிறார் பிறை சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களாக மரச்சின்னத்தில் போட்டியிடும் டேவிட் மார்ஷல்.

தனது 15 ஆண்டுகளாம் தீவிர அரசியல் பயணத்தில், 10 ஆண்டுகளாக நகராண்மைக் கழக உறுப்பினர் என்ற வகையில் பிறை தொகுதியில் அதிக அளவில் மக்கள் சேவை செய்துள்ளேன். எனது செயல்பாட்டில் பணிகளில் மேலும் நான் தொடர்ந்து பயணிக்கவும், என் பிறை மக்களுக்குத் தொண்டு செய்யவும் நான் இங்குச் சுயேச்சை வேட்பாளராக மரச்சின்னத்தில் 3 ஆம் எண்ணில் போட்டியிடுகிறேன் என்று டேவிட் மார்ஷல் தனது அரசியல் தீவிரப் பயணத்தை விளக்கினார்.
பிறை தொகுதியில் மரச்சின்னத்தில் களம் இரங்கியுள்ள டேவிட் மார்ஷல் தனது கொள்கை அறிக்கையை வெளியிட்டார்வீடுப்ப்ப்ன்அவரின் 7 திட்டக் கொள்கை அறிக்கையில் முதல் நிலையில் பிறை ஆற்றை மையமாகக் கொண்ட சுற்றுச் சூழல் சுற்றுலாத் தலம் மற்றும் பொருளாதாரம் சமூக மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பிறையை சமூக நீரோட்டத்தில் நேர்த்தியாக மாற்றி அமைக்கத் திட்டம் கொண்டுள்ளேன் என்று டேவிட் மார்ஷல் கூறினார். மேலும் பிறை தாமான் சிம்சார் சுற்றுச் சூழல் பூங்காவின் கட்டுமானம். தாமான் கிம்சார் தாமான் துங்கு, செபராங் ஜெயா வரை பிறை ஆற்று வழியாகச் சென்று தாமான் இண்டரவாசி வரை மெதுவோட்ட தடம் கட்டுதல். அதனைத் தொடர்ந்து கூடுதல் திட்டங்களாகத் தேசிய சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க புதிய படகுத் துறை அமைத்தல். பிறை பழைய சந்தை இடத்தில் சயாம் – பர்மா மரண ரயில் திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைத்தல்.
என்று என் வெற்றிக்குப் பிறகு உடனடியாக சேவையைத் தொடங்கப் போவதாக அவர் விவரித்தார்.

மேலும் பிறையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் திட்டம். கம்போங் மானிஸ் வீட்டுத் திட்டம், இப்பகுதியில் உள்ள 286 குடும்பங்களுக்கு தலா ஒரு வீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அதற்கான தேவைக்கு முழு மூச்சாக இறங்குவேன் என்றார் அவர்.
பிறையில் உள்ள சுங் வா சீனப்பள்ளியை சய் லெங் பர்க்கிற்கு இடம் மாற்றம் செய்தல், சை லெங் பார்க்கில் உள்ள 30 ஆண்டுக்கால குடியிருப்போர் பொது மண்டபத்தை சீரமைத்து, இரண்டு மாடிக் கட்டடமாக மாற்றுதல்.
பிறை ஜெயா , பசுஃபிக் குடியிருப்பாளர்களுக்கு அடுக்குமாடி உரிமை பட்டா பெற்றுத் தருதல். தாமான் சாய் லெங் பார்க்கில் அனைத்து வகை உணவுகள் கிடைக்கும் மையமாக ( ஹாட்ஸாட் ) ஹாட்ஸாட்ஸ் பாட் பகுதியாக உருவாக்குதல் போன்ற பல திட்டங்ளை செயல்படுத்துவதுதன் வழி பிறை மக்களின் தேவைகளையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சியில் முழு மூச்சாக இறங்குவோன் என்று என் 16 பிறை சட்டமன்ற சுயேச்சை வேட்பாளராக மரச்சின்னத்தில் போட்டியிடும் டேவிட் மார்ஷல் விவரித்தார்.



























