பொருட்கள் சேமித்து வைத்திருந்த கிடங்கு எரிந்து நாசமானதோடு இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர்

புக்கிட் மெர்தாஜாம், பெர்தாமாங் பாவ், ஜாலான் பெர்மாதாங் ஜாங்குஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள வன்பொருள் பொருட்களை சேமித்து வைத்திருந்த கிடங்கில் இன்று காலை தீப்பிடித்ததில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர், தீக்காயங்களுக்கு ஆளானவர் 50 வயது மியான்மர் ஆடவர் என்றும் மற்றொரு 30 வயது உள்ளூர் பெண் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் கூறினார்.

அந்த நபரின் கைகால்களில் 70 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். 300×300 சதுர அடி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 11.05 மணிக்கு தீயணைப்பு வீரர்களுக்கு அவசர அழைப்பு வந்தது. கிடங்கு 80% எரிந்தது. பெனாண்டி, பிறை பண்டார் பெர்டா, பெர்தாம் மற்றும் சுங்கை பாக்காப் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 41 பணியாளர்கள் ஒரு தன்னார்வ தீயணைப்புப் படையின் உதவியுடன் தீயை அணைக்க இடத்திற்கு விரைந்தனர் என்று அவர் கூறினார்.

இரண்டு டிரக்குகள், மூன்று கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்  தீயில் அழிந்தது. மதியம் 1.20 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டு, 6.45 மணியளவில் பணி முடிந்தது. மொத்த இழப்பு மற்றும் தீக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here