கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் : மிரியில் சம்பவம்

கூச்சிங், மிரி தாமான் துங்குவில் உள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று முகம் மற்றும் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மிரி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அலெக்ஸன் நாகா சாபு கூறுகையில், பொதுமக்களால் காலை 9.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

பெற்ற தகவலின் அடிப்படையில், ஒரு கட்டிடத்தின் முன் ஒரு நபர் மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸ் குழுவால் அவர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

விசாரணையைத் தொடர்ந்து, ஒருவரைக் கைது செய்த போலீசார், இந்த வழக்கு கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள் ஏஎஸ்பி துரைராஜாவை 085-433730 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திலோ தொடர்பு கொள்ளுமாறு அலெக்ஸன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here