ஜார்ஜ் டவுன்:
சுல்தான் அப்துல் ஹலீம் முஅத்ஸாம் ஷா பாலத்தின் KM5.7 இல், இன்று நண்பகல் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர், மற்றொருவர் காயமின்றி தப்பினார்.
விபத்தின் விளைவாக கார்களில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், அது 80 விழுக்காடு எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து மதியம் 12.08 மணியளவில் பத்து கவான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும், உடனே சம்பவ இடத்திற்கு வந்தபோது விபத்தில் இரண்டு கார்கள் சம்மந்தப்பட்டதாக தீயணைப்பு நடவடிக்கை தளபதி அஸ்மி தஹார் தெரிவித்தார்.
“முதல் காரில் மூன்று பேர் இருந்தனர் என்றும், அவர்களில் இருவர் காயமடைந்தனர்.
அதேநேரத்தில் “இரண்டாவது கார் தீப்பிடித்தது, ஆனால் ஓட்டுநர் பாதுகாப்பாக வெளியேறினார். இருப்பினும் அவர் காயமடைந்தார்,” என்று அவர் கூறினார்.
காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.








