கோலாலம்பூர்:
10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மலேசியப் பாஸ்போர்ட் விரைவில் அமலுக்கு வரும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று கூறினார்.
50 பக்கங்களை கொண்ட புதிய பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்வதற்கு குடிநுழைவுத் துறை தயாராக இருக்கிறது என்று அவர் சொன்னார்.
தற்போது ஐந்து ஆண்டுகளுக்கான பாஸ்போர்ட் நடைமுறையில் இருக்கிறது.
மலேசியர்கள் இனி அவர்களின் விருப்பத்திற்கு தேர்வு செய்துக்கொள்ளலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.




















