தாவாவ்:
ஜாலான் அபாஸ், பத்து 4, கம்போங் ஹிதாயத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ சம்பவத்தில் 8 வீடுகள் எரித்தன. அதேநேரத்தில் ஒரு பெண் முகம் மற்றும் கால்களில் தீக்காயங்களுக்கு உள்ளானார்.
31 வயதான அந்தப்பெண் தாவாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தாவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜெமிஷின் உஜின் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில்அதிகாலை 1.50 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது என்றும், அதைத் தொடர்ந்து 20 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
“அவர்கள் அங்கு வந்தபோது, எட்டு வீடுகள் மற்றும் நான்கு கார்கள் தீப்பிடித்து எரிவதைக் கண்டனர். அருகில் உள்ள மற்ற 15 வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் இன்று கூறினார்.
ஜெமிஷின் கூற்றுப்படி, அதிகாலை 3.43 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர், மேலும் மீட்பு நடவடிக்கை காலை 7.24 மணிக்கு முடிந்தது என்று அவர் சொன்னார்.
தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.





















