கோத்தா பாரு: பாசிர் மாஸ் மருத்துவமனையின் ஹீமோடையாலிசிஸ் பிரிவின் கூரையின் ஒரு பகுதி நேற்று இரவு இடிந்து விழுந்தது. ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. பாசிர் மாஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தளபதி அஸ்மி ஹுசின் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து இரவு 11.47 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கட்டிடத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டில், அப்பகுதியில் தீ, வெடிப்பு அல்லது தரை அசைவு அபாயம் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது. விபத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. அதே நேரத்தில் மேலும் நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறையைத் தொடர்பு கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார்.









