வேப் பழக்கத்தில் 20,000 மாணவர்கள் கல்வி அமைச்சு உன்னிப்பாக கவனிக்கிறது .

குளுவாங்,

பள்ளி மாணவர்களிடையே வேப் எனப்படும் மின் சிகரெட் புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 20,000க்கும் அதிகமான மாணவர்கள் இதில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று தெரிய வருகிறது.

நிலைமை மோசமடைவதற்குள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் வழி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு சமூகம்,பெற்றோர் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.

மாணவரிடையே வேப் பழக்கத்தை இப்போதே கட்டுப்படுத்தாவிட்டால் காலப் போக்கில் மிக பெரிய விபரீதம் ஏற்பட்டு விடும். இந்த பழக்கத்தை துடைத்தொழிப்பதில் எடுக்கப்படும் முயற்சிகளில் கல்வி அமைச்சு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இவ்விவகாரம், நேற்று முன்தினம், நாடாளுமன்ற மக்களவையிலும் எழுப்பப்பட்டது. மாணவர்களிடையே ஒரு கொடிய பழக்கமாக பரவி வரும் வேப் புகைப்பதை தடுப்பதற்கும் முறியடிப்பதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்கள் மத்தியில் வேப் புகைத்தல் பழக்கத்தை அடியோடு வேற்றுப்பதை கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று ஃபட்லினா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here