ஷா அலாம் செக்சன் 13 இல் (Shah Alam Seksyen 13) கடத்தும் முயற்சியிலிருந்து பதின்ம வயது இளைஞன் தப்பினான். நேற்று மாலை மணி 5.15 அளவில் அந்த பகுதியில் தனியாக மெது ஓட்டம் செய்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை திடீரென அங்கு ஒரு காரில் வந்த இரண்டு ஆடவர்கள் தடுத்துநிறுத்தினார்கள்.
அந்த சம்பவத்தின்போது சந்தேகப் பேர்வழியுடன் ஏற்பட்ட கைகலப்பில் அந்த இளைஞன் கை மற்றும் முகத்தில் காயம் அடைந்ததாக ஷா அலாம் போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனினும் அந்த இளைஞன் காரில் ஏற மறுத்ததால் சந்தேகப் பேர்வழியுடன் கைகலப்பு ஏற்பட்டதோடு அவனிடமிருந்து தப்பியோடி அருகேயுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலரிடம் சென்று உதவியை நாடியதைத் தொடர்ந்து செர்டாங் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டான்.








