போர்ட் கிள்ளான் கடல்சார் போக்குவரத்து பயிற்சி நிறுவனத்தின் துறைமுகத்தில், மோட்டார் சைக்கிள் கடலில் சறுக்கி விழுந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி இறந்தார். மற்றொருவர் உயிர் தப்பினார். சிலாங்கூர் தீயணைப்பு – மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முகிலிஸ் மொக்தார், இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, இன்று காலை 8.17 மணிக்கு உயிரிழந்த 29 வயதுடைய நபரின் உடல் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை, அந்த நபர் கடலில் விழுந்ததாக நம்பப்படும் இடத்திலிருந்து சுமார் 200 மீ தொலைவில் போர்ட் கிள்ளான் நீர் மீட்புக் குழு உறுப்பினர்களால் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும் நடவடிக்கைக்காக உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு நபர், 30 வயதுடையவர், வழிப்போக்கர்களால் மீட்கப்பட்டார்.









