ஜார்ஜ் டவுன்:
மின்னிய சிகரெட்டுகள் (வேப்ஸ்) விற்பனையை முழுமையாகத் தடை செய்வது குறித்து பினாங்கு மாநில அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில சுகாதாரம், இளைஞர் மற்றும் விளையாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டானியல் கோய் சீ சென் தெரிவித்துள்ளார்.
பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 (சட்டம் 852) இன் முழு அமலாக்கம் அவற்றின் பயன்பாட்டை திறம்படக் கட்டுப்படுத்தவில்லை என்பதால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.
இவ்வாண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் புகைபிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம் முதல் முழுமையாக அமல்படுத்தப்படும்.
மேலும் சட்டத்தின் செயல்திறனை தனது தரப்பு மதிப்பீடு செய்யும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
சிறார்களுக்கு மின்னியல் சிகரெட்களின் விற்பனையை தடை செய்ய மாநில அரசு முழுமையாக ஆதரிக்கிறது என்று டானியல் கூறினார்.





















