மலர்களே மலருங்கள்

மலர்கள் பூக்கும் போதுதான் தன் அழகையும் அர்த்தத்தையும் வெளிப்படுத்துகின்றன; மனிதனும் மலர்ந்தால்தான் அவனது வாழ்வின் நோக்கம் பூரணமடையும்.”

உங்களைப் பற்றி உங்களிடமே எடுத்துரைக்க என்னை அனுமதியுங்கள். உங்களின் பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது, நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கு பிறந்நீர்கள் என்பதும் எனக்குத் தெரியாது. உங்களைப் பற்றி உங்களிடமே சொல்வதற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், நான் உங்களைப் பற்றி எடுத்துரைக்க முயற்சி செய்கிறேன். காரணம், எனக்கும் உங்களுக்கும் வித்தியாசம் கிடையாது. என்னிடமுள்ள அதே ஆர்வம்தான் உங்களிடமும் இருக்கிறது. நிறைவடைய வேண்டும் அமைதியை உணர வேண்டும், பேரானந்தம் என்ற மேலான அந்த உன்னதமான உணர்வை உணர வேண்டும் என்று என்னிடமுள்ள அதே ஆர்வம்தான் உங்களிடமும் இருக்கிறது. 

உதாரணத்திற்கு, ஒரு விதை விதைக்கப்பட்டவுடன் அது துளிர் விடுகிறது. பிறகு, வளர்ந்து மலர ஆரம்பிக்கிறது. அது முழுவடிவத்தில் நன்றாக மலர்ந்து தன்னுடைய முழு அழகையும் வெளிப்படுத்தி நறுமணம் வீசும்போதுதான் அது பூர்த்தியடைகிறது.  அது துளிர்விட்டு பிறகு பூத்துக்குலுங்குகிறது. அப்போதுதான் அது மிக கவர்ச்சியாக இருக்கும். இதுதான் ஒரு மலரின் வாழ்க்கையாகிறது. என் அபிப்பிராயத்தில் நாமும் மலர்களைப் போன்றவர்கள்தான். நாமும் மலர வேண்டியது அவசியமானது.  இந்த உலகமெனும் தோட்டத்தில்  வாழும்  மலர்களாகிய நாம் ஏன் மலரவில்லை என்பதற்குப் பல சாக்குப்போக்குகளைச் சொல்கின்றோம்.  நான் ஒவ்வொரு மலராகச் சென்று, “சாக்குப்போக்குகளைச் சொல்லாதீர்கள், தயவு செய்து மலருங்கள், மலர்ந்தாலே போதும். காரணம், அப்போதுதான் நீங்கள் மிக அழகாக இருப்பீர்கள்,” என்று சொல்லும் ஒருவராகத்தான் இருக்கிறேன். 

நீங்கள் சந்திரனுக்குப் போகலாம் செவ்வாய்க் கிரகத்திற்குப் போகலாம், அதில் ஏதும் தவறில்லை. ஆனால், ஒரு மலரான நீங்கள் மலர்வதற்கு மறந்துவிடாதீர்கள். ஏனெனில் நீங்கள் மலர்வதற்காக  நிறைய வெளிப்படையான விஷயங்கள்  இருக்கின்றன.  நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள். நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர். சொர்க்கம் உங்களுள்ளே இருக்கிறது. நீங்கள் தேடுவது உங்களுள்ளே இருக்கிறது.  நீங்கள் தேடும் அமைதி உங்களுக்குள்ளே இருக்கிறது. நீங்கள் நம்ப முடியாதளவிற்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டுளீர்கள் என்பதும்  உங்கள் வாழ்வின் இருளை அகற்றுவதற்கான ஒளியும் உங்கள் உள்ளே இருக்கிறது என்பதும் உண்மையிலேயே மிக மிக வெளிப்படையானவை. ஆகையால், ஒரு மலராக இருக்கும் நீங்கள் தயவுசெய்து மலருங்கள். நறுமணம் வீசுங்கள்.

மலருங்கள். மலர்வதில்தான்  உங்கள் வாழ்க்கையில் நிஜமான  ஆனந்தமும் அமைதியும் நிலவும்.”

கடந்த 60 வருடங்களாக திரு பிரேம் ராவத் அவர்கள் தனி ஒரு  மனிதனின் உள் அமைதியைப் பற்றி உலகமுழுவதும் உறையாற்றி வருகிறார். நாடாளுமன்றம் முதல் சிறைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சிஸ்டூடியோக்கள்  வரை பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.

மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்:

www.premrawat.com

ullathinkural.com

www.timelesstoday.tv

https://youtube.com/@sovtamil6222?si=Bhum5Mk7Ihmd9NLB

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here