ஜோகூர் செகாமட்டில் இன்று காலை 7.29 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. செகாமட்டில் இருந்து மேற்கே சுமார் 10 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
நிலைமையை கண்காணித்து வருவதாக அது தெரிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் செகாமட் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியான லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று அதிகாலை 4.24 மணிக்கு செகாமட்டில் இருந்து வடகிழக்கே சுமார் 12 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.







