கம்போங் கஹாயில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு வங்காள தேச தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து நேற்று மாலை 3:30 மணியளவில், Agro Politan கஹாய் பண்ணையிலிருந்து தொழிலாளர் குடியிருப்பிற்காக செல்லும் வழியில் நிகழ்ந்தது.
52 வயது உள்ளூர் ஓட்டுநர் ஓட்டிய பிக்-அப்பில் ஆறு தொழிலாளர்கள் இருந்தனர். சிறிய வளைவுகளில் கார் கட்டுப்பாட்டை இழந்தது கவிழ்ந்ததில், பின் இருக்கையில் இருந்த இரண்டு பணியாளர்கள் பிக்-அப்பிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஓட்டுனருக்கும் இதர நான்கு பணியாளர்களுக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிந்தேண்டன் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.
உயிரிழந்த 24 வயதுடைய முஹம்மட் ஷாமிம் ரெஸா, 26 வயது தூஹின் அலி ஆகிய இருவரின் உடல்களும் குவாலா லிபிஸ் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.




















