பேராக் சுல்தானை தாக்க முயன்ற பெண் – 3 நாள் காவல்

ஈப்போ:

பேராக் மாநிலத்தின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது மேன்மை தங்கிய பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை மேடையில் அணைக்க முயன்ற 41 வயது உள்ளூர் பெண், மூன்று நாட்களுக்கு ரிமானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹமட் தெரிவித்தார்.

இன்று முதல் புதன்கிழமை வரை இந்த தடுத்து வைப்பை Majistret Wardah Nabilah Mohd Abd Wahab வழங்கியுள்ளார் அன அவர் கூறினார்.

பெண்ணுக்கு எதிராக குற்ற விசாரணை சம்பவம் செக்‌ஷன் 325/511 பிரிவின் கீழ் – கடுமையான காயம் ஏற்படுத்த முயற்சி செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்டப் பெண் மேடையின் பக்கவழியாக நுழைந்து, மாநில கீதம் ஒலிக்கும்போது சுல்தானை அணுக முயன்றார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர்.

அப்பெண்ணுக்கு முன்பே மனநல சிகிச்சை வரலாறு உள்ளது எனவும் அபாங் ஸைனால் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here