கெப்போங்: வனப் பகுதியில் தீ விபத்து!

கோலாலம்பூர்:

கெப்போங், மலேசிய வன ஆராய்ச்சி நிறுவனம் FRIMற்கு அருகிலுள்ள, ஒரு ஏக்கர் வனப் பகுதியில், நேற்றுத் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்து குறித்து, நேற்று மாலை, 4.24 மணியளவில், அவசர அழைப்பு பெற்றதாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புத் இலாகாவின் (JBPM) நடவடிக்கை துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் மொக்தார் (Ahmad Mukhlis Mokhtar) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சுங்கை பூலோ தீயணைப்பு மீட்பு நிலையத்திலிருந்து (Sungai Buloh Fire and Rescue Station), ஆறு தீயணைப்பு வீரர்களும், ஒரு தீயணைப்பு வாகனமும், சம்பவ இடத்திற்கு, விரைந்தனர் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, “சம்பவ இடத்தில், தீ, ஒரு ஏக்கர் பரப்பளவிலான வனப் பகுதியைச் சூழ்ந்தது. தீயணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன,” என்று, அவர், இன்று, ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here