சிகாம்புட் மூத்த குடிமக்கள் செயல்பாட்டு மையத்தின் (PAWE) ஏற்பாட்டில் இலவச முடி திருத்துதல், ரஹ்மா உதவித் திட்டம் குறித்த விளக்கமும் அதற்கான பாரங்களை நிரப்புவது ஆகியவை சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ சேவை மையத்தில் நடைபெற்றது. நாட்டிலுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரு PAWE சேவை மையம் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வருகிறது.
சிகாமட் தொகுதி PAWE மையத்தின் தலைவர் ஜெயகுமார் கூறுகையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இந்த சேவை மையம் இயங்கி வருவதாகவும் கோவிட் காலகட்டத்தில் பி40 பிரிவினருக்கு அத்திவாசிய ஊணவுப் பொருட்களை வழங்கி வந்தோம் என்றும் தெரிவித்தார்.
60 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே இந்த சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். பொதுவாக வயதானவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை பார்த்து கொள்வதிலேயே தங்களின் நேரத்தை செலவிடுகின்றனர். அவர்களின் ஆரோக்கியத்தை பேணவும் அவர்கள் வயதை ஒத்தவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற நோக்கில் யோகா,நடனம், ஜும்பா, நாற்காலியில் அமர்ந்து கொண்டு உடற்பயிற்சி, மருத்துவ சோதனை ஆகியவற்றை தினசரி நடவடிக்கைகளாக மேற்கொண்டு வருகிறோம்.
சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னோ இயோவின் ஏற்பாட்டில் இன்று இலவச முடி திருத்துதல், ரஹ்மா பதிவுத் திட்டத்தை மேற்கொண்டோம். ரஹ்மா பதிவு திட்டத்தில் 100க்கும் மேற்பட்டோரும், 85 பேருக்கு இலவச முடிதிருத்தம் செய்யப்பட்டதாக ஜெயகுமார் தெரிவித்தார்.











