அமெரிக்கா: இரவுநேர கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி

வாஷிங்டன்,அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரின் பிர் கார்டன் பகுதியில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் நேற்று இரவு வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் குவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த கேளிக்கை விடுதிக்குள் நேற்று இரவு துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனாமாக தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் துப்பாக்கி சூடு நடத்தியது செனகல் நாட்டை சேர்ந்த டிங்கா டயாகி (வயது 53) என்பது தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு பயங்கரவாத தாக்குதல் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here