நாட்டையே உலுக்கிய பாலியல் வன்கொடுமை வழக்கு – உயிரிழந்த பெண்ணின் தாய் தேர்தலில் போட்டி…

கொல்கத்தா, ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த பயிற்சி பெண் மருத்துவரின் தாயார் தற்போது அரசியல் களத்தில் குதித்துள்ளார்.

பாஜக (BJP) சார்பில் அவர் வரவிருக்கும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 2026-இல் போட்டியிடுகிறார். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பனிஹாட்டி தொகுதியில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு, மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல், ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here