ஆற்றில் விழுந்து காணாமல்போன முதியவர் சக்கர நாற்காலியில் இருந்த முதியவர் 3 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

கோல சிலாங்கூரில் உள்ள சுங்கை கம்போங் குவாந்தான் ஆற்றில் விழுந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட  மூன்று நாட்களுக்குப் பிறகு, சக்கர நாற்காலியில் இருந்த முதியவர் ஒருவர் இன்று நீரில் மூழ்கி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாடுகளுக்கான துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார், 63 வயதான அந்த நபரின் சடலம் காலை சுமார் 8.30 மணியளவில் பத்து துஜு செதெங்கா படகுத்துறைக்கு அருகே பொதுமக்களில் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்டவர், அவர் விழுந்ததாகக் கருதப்படும் இடத்திலிருந்து 5.5 கி.மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு 9.09 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். மேலும் விசாரணைக்காக சடலம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here