எரிபொருள் சிக்கனம்: அலுவலகத்திற்கு நடந்தே சென்ற பீகார் முதல் மந்திரி

மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொண்டிருந்தார். அதேபோல், நிறுவனங்கள் கொரோனா காலத்தைப் போல வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை வழங்கலாம் எனவும் யோசனையை முன்வைத்தார்.

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று பாஜக ஆளும் மாநில அரசுகளும் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இதற்கிடையே பெட்ரோல்,டீசல் விலை தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்கும் விதமாக பீகார் முதல் மந்திரி சோம்ராட் சவுத்ரி, தனது இல்லத்தில் இருந்து தலைமை செயலகத்திற்கு நடந்தே சென்றார். அரசு அலுவலகங்களில் உள்ள கேண்டீன்களில் பாம் ஆயில் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here