செபாட் எண்ணெய் தளத்தில் பாதுகாப்பு படகு விபத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள் சொக்சோ பெற தகுதியுடையவர்கள்

கோல திரெங்கானுவின் செபாட் எண்ணெய் தளத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் வாரிசுகள், சமூக பாதுகாப்பு அமைப்பான சொக்சோ வழங்கும் நலன்களைப் பெற தகுதி பெற்றுள்ளனர். மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ  ரமணன் ராமகிருஷ்ணன் சொக்சோ பரிவு அணியின் ஆய்வின் மூலம், உயிரிழந்த அனைத்து தொழிலாளர்களும் 1969 தொழிலாளர் சமூக பாதுகாப்புச் சட்டத்தின் (LINDUNG Pekerja) கீழ்  பதிவுகளை கொண்டிருந்தது உறுதிசெய்யப்பட்டது.

ஆய்வின் அடிப்படையில், மறைந்த Ahmad Fiqri Zakaria அவர்களின் வாரிசுகள் சார்ந்தோருக்கான உதவித்தொகை (Faedah Orang Tanggungan – FOT) மற்றும் இறுதி சடங்கு உதவித்தொகை (Faedah Pengurusan Mayat – FPM) பெற தகுதி பெற்றுள்ளனர். அவரது மனைவி புவான் சித்தி, வாழ்நாள் முழுவதும் மாதாந்திர FOT தொகையைப் பெற தகுதியுடையவர். அவர்களின் 10 வயது மகன் 21 வயது நிறைவடையும் வரை அல்லது முதல் பட்டப்படிப்பு முடியும் வரை இந்த உதவித்தொகையைப் பெறுவார். மொத்தமாக, இந்த குடும்பம் மாதம் RM5,355 அளவிலான FOT தொகையையும், கூடுதலாக ஒருமுறை வழங்கப்படும் RM3,000 அளவிலான FPM தொகையையும் பெறும் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், மறைந்த Muhammad Faezuan Hakim Mohammad Bustamam அவர்களின் மனைவி மற்றும் ஒரு வயது ஏழு மாத குழந்தையும் இதே நலன்களுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவரது மனைவி புவான் Khairinia, தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பதுடன், வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் RM3,105 அளவிலான FOT தொகையைப் பெறுவார். அவர்களின் குழந்தையும் 21 வயது நிறைவடையும் வரை அல்லது முதல் பட்டப்படிப்பு முடியும் வரை இந்த நலனைப் பெறும்.

இதனுடன், இறுதி சடங்கு செலவுகளுக்காக RM3,000 அளவிலான ஒருமுறை FPM தொகையும் வழங்கப்படும் என்றார். ரமணன் மேலும் தெரிவித்ததாவது, மறைந்த Nik Muhammad Hafifi Asri Ab Majid அவர்கள் தாய் தந்தையற்றவராகவும் திருமணம் ஆகாதவராகவும் இருந்தார். அவரது ஏழு உடன்பிறப்புகளும் மாதாந்திர உதவித்தொகைக்கான வயது வரம்பை கடந்திருந்ததால், இறுதி சடங்கு செலவுகளுக்காக RM3,000 அளவிலான ஒருமுறை FPM தொகை அவரது மூத்த சகோதரருக்கு அருகாமை வாரிசாக வழங்கப்படும் என்றார். இதற்கிடையில், சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரே நபரான 37 வயதுடைய Muhammad Taufik Mohd Ruslan அவர்களின் நிலையும் PERKESO தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தற்போது Hospital Sultanah Nur Zahirah (HSNZ) மருத்துவமனையில் கடுமையான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, Muhammad Taufik தற்காலிக ஊனமுற்ற நலனான Faedah Hilang Upaya Sementara (FHUS) பெற தகுதி பெற்றுள்ளார். அவர் சிகிச்சை பெற்று வரும் வரை இந்த நலன் வழங்கப்படும்; அதன் இறுதி தொகை விரைவில் நிர்ணயிக்கப்படும்.

சொக்சோ தற்போது தொழிலதிபரிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும், வாரிசுகளின் ஆவணங்களையும் இறுதிக்கட்டமாகப் பெற்று வருகிறது. அனைத்து நலன்களும் மிக விரைவாக வழங்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. Kementerian Sumber Manusia (KESUMA) மற்றும் PERKESO, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றன. இந்த உதவித்தொகைகள், தங்கள் ஆதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு ஒரு வாழ்வாதார ஆதரவாக அமையும் என நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here